பிடித்த பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது நமக்கு பதட்டம் வருவது இல்லை. ஆனால் ஆயிரம் யானைகளை ஒரேநேரத்தில் எதிர்கொண்டு வெற்றிகொள்ளும் மாபெரும் போர் வீரனாக இருந்தாலும் கூட வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது பதட்டம் படபடப்பு அவனுக்கு வருகிறது.

பெண்ணாக இருந்தால் சொல்லவே தேவையில்லை வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு இருக்கும் படபடப்பு வேறு எந்த உயிரினத்திற்கும் உலகில் இருக்காது.
திருமணம் ஆன முதல் நாளில் துணையின் அனைத்து நடவடிக்கைகளும் அது எப்படி இருந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கும் திருமணம் ஆன சில மாதங்களுக்கு, சில வருடங்களுக்கு பின் துணைவரின் நடவடிக்கை நல்லமுறையில் இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்த ரசனை தன்மை நாளடைவில் குறைந்து விடுகிறது.
காதலர்கள் இடையேயும் இதே நிலைபாடு தான். ஆரம்பத்தில் காத்திருப்பு கூட சுகமாக இருந்த காதலர்களிடையே காதல் நன்கு வளர்ந்த பின்பு காரணமேயின்றி பல சண்டைகள் தொடர்ந்து வருகிறது.

இது போன்ற திருமணம் ஆன தம்பதியர் மற்றும் காதலர்களின் இந்த நிலை கண்டு எதிர்கால வாழ்வின் துணையை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு குழப்பம் அதிகரிக்கலாம். குழப்பம் தேவையில்லை வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வழி மிக மிக சுலபமானது. நீங்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கை துணை, நீங்கள் வேண்டியதை வேண்டிய நேரத்தில் கேட்காமலேயே புரிந்து கொண்டு பணிவிடை செய்யும் துணை உங்களை வந்தடைய நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை.

பிடித்த பொருளை தேர்ந்தெடுப்பதில் வராத பதட்டம் பிடித்த துணையை தேர்ந்தெடுக்கும் போது வருவதற்கான காரணம் அவர்களிடம் இருக்கும் உங்களின் எதிர்பார்ப்பு தான்.
உங்கள் உயிரான துணைவரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது போன்றே அவரும் உங்களிடம் பல எதிர்பார்ப்பை கொண்டிருப்பார். பிரச்சினைகள் பல வருவதற்கு மூலக்காரணமே இந்த எதிர்பார்ப்பு தான். உண்மையில் இருவரிடையேயான இந்த எதிர்பார்ப்புகள் நிலையாக இருக்காது. காலத்திற்கேற்ற வகையில் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டே இருக்கும்.

அப்படியானால் பிரச்சினையற்ற வாழ்க்கைக்கு வழி எதிர்பார்ப்பு அற்ற கொடுக்கும் மனநிலையே. ஆம், நீங்கள் இயல்பாக எந்த வகையான எதிர்பார்ப்புமின்றி கொடுக்கும் மனநிலையில் உதவும்போது இந்த பிரபஞ்சமே இயற்கையில் நீங்கள் விரும்பிய வண்ணம் ஒரு துணையை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும். அந்த துணையின் தேவையறிந்து கொடுக்கும் தன்மையில் மனமகிழ்வுடன் எதிர்பார்ப்பின்றி உதவும்போது வாழ்க்கை மனநிறைவுடன் இருக்கும். நீங்கள் விரும்பிய வாழ்க்கை துணை அமையவும், அமைந்த வாழ்க்கை துணையுடன் மகிழ்வாக பலகாலம் கழிக்கவும் துணையின் தேவைக்கேற்ப உதவும் மனநிலையில் அவருக்கு வேண்டியதை செய்வதே சிறந்த வழி. நீங்கள் அப்படி உதவும்போது உங்களுக்கு தேவையான அனைத்தும் நீங்கள் கேட்காமலேயே உங்கள் துணையிடமிருந்து எந்நேரமும் மகிழ்வுடன் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

1 Comment

  • Durai Aravind
    Posted February 16, 2019 4:41 am 0Likes

    Arumai..
    Thanks for sharing, Ulchemy

Leave a comment

Call Now

0422 404 0422
+91 96559 92559

Visit Us

Peelamedu, Coimbatore
Tamilnadu, India

Dakshina Foundation © 2019. All Rights Reserved.